நெடுந்தீவில் இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இன்று (ஜனவரி 22) காலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோரின் விசாரணைகளை அடுத்து மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
திருலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அமலதாசன் மதன்குமார் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு நேற்றையதினம் மாலை சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.