கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் நெடுந்தீவில் இருந்து கச்சதீவிற்கு படகுச்சேவைக்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இருந்து நாளையதினம் (மார்ச்14) காலை 09:30 மணிக்கு சமுத்திரதேவா படகும் காலை 10:00 மணிக்கு அமிர்தினி படகு சேவையும் காளியம்பாள் படகு மதியம் 12:00 மணிக்கும் கச்சதீவு நோக்கி இடம்பெறும் என நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாத்திரிகர்களுக்கு மார்ச் 14 ஆம் திகதி இரவு உணவும் மார்ச் 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.