நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இனரறையதினம் (ஜனவரி 30) மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் பயனுள்ளதாக இடம்பெற்றுள்ளது.
Lions club inner Colombo, Lions club of Barberino Tavarnelle Italy என்பவற்றின் அனுசரணையுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மருத்துவமுகாம் இனரறு காலை 9.00 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது கண் பார்வை தொடர்பில் 125 பேர் பரிசோதனை செய்து 115 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டதுடன் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது, காது தொடர்பாக 15 பேருக்கு பரிசோதனையும் அதற்கான பரிந்துரையும் வழங்கப்பட்டதுடன், சர்க்கரை நோய் தொடர்பில் சுமார் 45 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
குளுக்கோ மீற்றர் , வெப்பமானி என்பவற்றுடன் கர்ப்பிணித் தாய்மாருக்கான அயன் மாத்திரைகளும் நெடுந்தீவு பிரதேச பதில் வைத்தியரிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இவ்வாறான மருத்து முகாமினை ஒவ்வொரு வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக லயன்ஸ் கழகத்தினர் உறுதியளித்து சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இன்றைய மருத்துவ முகாமின் போது Lions club inner Colombo, Lions club of Barberino Tavarnelle Italy என்பவற்றின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை அலுவலர்கள், பயனர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.