நெடுந்தீவிலுள்ள பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் உள்ள உப வீதிகள், ஒழுங்கைகள் என்பவற்றுக்கு, நெடுந்தீவு பிரதேச சபையினரால் புதிதாக பெயர் பலகைகள் நாட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கான பாதை ஒழுங்கு வரைபட வழிகாட்டிப் பதாகைகளும் நாட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நடவடிக்கைகள் ஊடாக நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக இடங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமென்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.