நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுமா? இது மக்களின் கேள்வியாக இருக்கின்றது
நெடுந்தீவு குறிகட்டுவான் மக்களது போக்குவரத்திற்காக வடமாகாணசபையினால் உலகவங்கியின் நிதியுதவியுடன் கடந்தகாலத்தில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு நெடுந்தாரகை படகு வழங்கப்பட்டது. மிகவும் வருமானம் குறைந்த பிரதேசசபையாக காணப்படுகின்ற போதும் மக்களது பாதுகாப்பு நிறைந்த பிரயாணம் எனக் கூறிபெரும் சுமையினை பிரதேசசபையிடம் சுமத்தப்பட்டுவிட்டது
ஆயினும் தற்போதைய சூழ்நிலையில் வடதாரகைப் படகு பழுதடைந்துள்ளது, குமுதினிப் படகும் அண்மையில் பழுதடைந்துள்ளது காற்று மிகவும் பலமாக அடிக்கிறது கடல் கொந்தளிக்கின்றது இக்காலத்தில் மக்களது போக்குவரத்தினை இலகு படுத்த வேண்டிய தேவைபிரதேச சபை ,பிரசேசெயலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய பங்காக காணப்படுகின்றது
மக்கள் போக்குவரத்துக்கு அல்லல் படும் சந்தர்ப்பத்தில் நெடுந்தீவுக்கு வழங்கப்பட்ட நெடுந்தாரகைப் படகு இறங்கு துறைமுகத்தில் தரித்து நின்று பழுதடைகின்றது. குறிப்பிட் நிதி வருடத்திற்கு (4மில்லியன் ரூபாய்) நெடுந்தீவுக்கு பிரதேசசபைக்கு மானியமாக வழங்கப்படுகின்றது
இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி, வருடத்திற்கான இன்சூரன்ஸ் பணம் செலுத்ப்பட்டு தரித்து நிற்பதிலும் பார்க்க மக்கள் சேவைக்காக பயன்படுத்தி வருமானத்தினைப் பெற்றுக் கொள்வதுடன் வருமானத்திலும் பார்க்க செலவு அதிகரிக்கும் போது அரசாங்கத்துடன் கதைத்து மானியத்தினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொள்ளல் அவசியம்
பிரதேச சபையின் முன்னைய ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களிலாவது வடதாரகை சேவையில் ஈடுபட்டது தற்போது பிரதேச சபை ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வசம் காணப்படுவதுடன் நெடுந்தீவு தங்களின் கோட்டை எனக்கூறும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ்; தேவானந்த அவர்கள் கடற்தொழில் அமைச்சாரக காணப்படுவதுடன் அரசாங்கத்துடன் நட்புறவாகவும்; செயற்பட்டுவருகின்றார் எனவே அவர் முயற்சித்தால் இது முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நெடுந்தீவான் எனப் பெருமை கொள்ளும் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் இவ் விடயத்தில் அக்கறை செலுத்தி இதற்கான மானியத்திiனை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு பாரளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் ஊடாக மக்கள் போக்குவரத்தில் நெடுந்தாரைகையினை ஈடுபடுத்த ஆவண செய்யமால் இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து அன்று முதல் இன்று வரை பாரிய பிரச்சனைகளாகவே இருக்கின்றன எனவே மக்கள் பிரதிநிதிகள் அரச திணைக்களங்கள் உடன் நடவடிக்கை மேற் கொண்டு இப் பிரச்சனைக்கான தீர்வினை முன் வைக்குமாறு நெடுந்தீவு மக்கள் வேண்டி நிற்கின்றனர்.