கடலோடு அடித்துச் செல்லப்பட்ட நெடுந்தாரகை படகின் நங்கூரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை புதிய நங்கூரம் கொள்வனவுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் கடலில் ஒடுங்கி போனது. அதைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அந்த நங்கூரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், புதிய நங்கூரத்தை விரைவாக கொள்வனவு செய்து, சுமார் ஒரு மாதத்திற்குள் படகுச் சேவையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, “பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகள் பழுதடையும் சூழல் காரணமாக கடந்த காலங்களில் நாங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டோம். தற்போதைய நெடுந்தாரகைப் படகு இயங்குமுறையில் இருந்தாலும், நங்கூரம் இல்லாததால் பயன்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடிகளை சந்திக்கின்றோம்,” என்று நெடுந்தீவுப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.