நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சர்வமததலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்–ஹாஜ் அஷ்–ஸெய்யித்அல்–ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்–காதிரி, அருட்தந்தை கலாநிதிநிஷான் குரே ஆகியோர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கானஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடித்தை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிவிஜயதாச ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வலுப்படுத்தல். சகலஇனங்களுக்கிடையில் சமாதானத்தினையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்புதல்ஆகியவற்றினை நோக்கி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காகஇவ்வமைச்சிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல்இப்பதவியின் பிரதான இலக்கு மற்றும் செயற்பணிகளாகும் என்றும்நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.