தற்போது நாடு உள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே அவசியமாகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி – வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு நேற்று முன்தினம் (13 பெப்ரவரி) தலைமை தாங்கி கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான சம தன்மை பேணப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.