ஶ்ரீலங்கா டெலிகொம், காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01 மார்ச்) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி ஊழியர் சங்கம், தேசிய மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய வளங்கள் பாதுகாப்பு இயக்கம், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், குறித்த அமைப்புக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.