இன்றைய தினம் ( 03 -07-2021 ) தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளருமான கருணாகரன் நாவலன் அவர்கள் ரூபாய் 30000 நிதியுதவியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற பல குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கியுள்ளார் .
2000 ம் ஆண்டு தென்மராட்சி மிருசுவில் கிராமத்தில் சிறீலங்கா ராணுவத்தினரால் எட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் . அவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்த பொதுமக்களின் குடும்ப உறவுகள் இன்று எவ்வித உதவிகளுமின்றி சொல்லில் அடங்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் .மேற்படி குடும்பத்தினரிடமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய ஐந்தாயிரம் ரூபாய் உலருணவுப்பொதியும் வழங்கப்பட்டது . அத்தோடு தீவகத்தில் பல குடும்பங்களுக்கும் மேற்படி நிதியில் உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
திரு. கருணாகரன் நாவலன் ஆண்டு தோறும் தனது பிறந்த தினத்தன்று பொதுநலன் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் மற்றும் சமூக ஆர்வலர்களான தரங்கன் , ஜீவா , ராகுலன் ஆகியோரும் மேற்படி செயற்பாடுகளில் கலந்துகொண்டிருந்தனர் .