நாளைய தினம் அரசு கட்டுப்பாடுகளுடன் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதானல் நாளைய தினம் (ஜீன் 21) நெடுந்தீவில் இருந்து பொதுமக்கள் போக்குவரத்து மேற்கொள்ளும் முகமாக காலை 6.30 மணிக்கு நெடுந்தாரகைப் படகு சேவை இடம் பெறவுள்ளது என கௌரவ பிரதேச சபைத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் நெடுந்தாரகைப் படகு காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து மீளவும் நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
அதன் பின்னர் மாலை 03.00 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் மாலை 4.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி தனது சேவையினை வழங்கவுள்ளது.
பொதுப்போக்குவரத்து சேவைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கொரோனா தாக்கத்தில் இருந்து இதுவரை பாதுகாப்பாக உள்ளமையால் வெளிச் செல்லும் உட் செல்லும் பயணிகள் தகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது