நான்கு சீனப் பிரஜைகளுக்கு ரூ.7 கோடி அபராதம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பகுதியின்  இடையக வலயத்தில் சட்டவிரோதமாக மரபணு வளங்களைச் சேகரித்த நான்கு சீனப் பிரஜைகளுக்கு 76.4 மில்லியன் ரூபா அபராதம் விதித்து கலவானை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பிடித்தமை மற்றும் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட 143 குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய குறித்த குழுவினர், சிங்கராஜ வனப்பகுதியில் பல்வேறு பூச்சிகள் மற்றும் ஊர்வன இனங்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்த குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று (23/11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கலவானை நீதவான் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பகுதியானது யுனெஸ்கோவினால் உலக மரபுரிமைத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment