நான்காவது அலையை நோக்கி நாடு செல்கிறது இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை
இலங்கை கொரோனா தொற்றின் நான்காவது அலையின் ஆரம்பத்தை நெருங்கி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா தடுப்பூசிகளை மாத்திரம் நம்பி முன்னோக்கிச் செல்வது சாத்தியமில்லை என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டில் நூற்றுக்கு 8 சதவீதமானோருக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.