நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில்!- விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயல்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே கீரி சம்பாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது அரிசி மாபியாக்களினால் செயற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடாகும்.

கடந்த சிறுபோகத்தில் கீரிசம்பா அறுவடை குறைவடைந்திருந்த போதும் அதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையின் போது பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.

அதனால் போதுமான வகையில் கீரிசம்பா கையிருப்பில் இருக்கிறது. அத்துடன் இம்முறை பெரும்போகத்தின் போதும் அதிகமாக கீரி சம்பா உற்பத்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கியுள்ளேன்” என்றார்.

Share this Article