நாகர்கோயில் கடற்கரையில் 10 படகுகள் தீயிட்டு எரிப்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயிலில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று (மார்ச் 22) அதிகாலை நடந்துள்ளது என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் படகுகள் முன்னர் கடலட்டைத் தொழிலிலுக்குப் பயன்படுத்தப்பட்டவை என்றும், தற்போது அவை பயன்படுத்தப்படாது கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகின்றது.

படகுகள் தீயிட்டு எரிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article