நவாலி தெற்கு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சித்த மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக உணவுத் தினத்தை முன்னிட்டு நவாலி தெற்கு ஜெ/136 பிரிவிலுள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று(ஜூன் 7) ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது. இதில் 30 முதியோர்கள் சேவை பெற்று பயனடைந்தனர்.

தொடர்ந்து பாதுகாப்பான ஊட்டச்சத்து மிக்க உணவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயுர்வேத சித்த மருத்துவர் திருமதி கேமலதா அவர்களும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.

Share this Article