நள்ளிரவு முதல் குறைக்கப்படும் உணவக விலைகள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சமையல் எரிவாயு விலை குறைப்பை தொடர்ந்து சோற்று பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இதன் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (04.07) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாகவும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment