நல்லூர் வாள்வெட்டுத் தொடர்பில் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று(மார்ச் 2) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி அதிகாலை நல்லூர் பின் வீதியில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலானஅணி சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என்றும், கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article