நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற “முழு நிலா கலை நிகழ்வு”!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற முழுநிலவு நிகழ்வில் உடுவில் நாகதீபன் குழுவினர் மங்கல இசை வழங்கி சிறப்பித்தனர்.

உரும்பிராய் ஜெயானந்த ஜீவ நர்த்தனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம், நல்லூர் வீணாலயா கலைமன்ற மாணவிகளின் வீணை இசை, அராலி தெற்கு நர்த்தன ஷேத்திரா நடனாலய மாணவிகளின் மயில் நடனம், சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசை குழுவினரின் ‘தீர்க்க சுமங்கலி’ வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி நிகழ்வாக நாடககீர்த்தி, கலாபூஷணம் யூல்ஸ் கொலின் அண்ணாவியாரின் “பண்டாரவன்னியன்” நாட்டுக்கூத்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்விலே பேராசிரியர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this Article