நல்லூரில் சைக்கிளை மோதித்தள்ளியது கார்!- பெண் ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மனி வீதியும் இணைகின்ற முத்திரைப் சந்தியில் இன்று (மே 8) திங்கட்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றது.
வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடீரென சடுதியாக திரும்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share this Article