நயினாதீவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு அபிவிருத்திக் கழகம் சுவிஸ் ஒன்றியத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை – 2025 இல் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று நயினாதீவில் சித்தியடைந்த மாணவர்கள் நேற்றைய தினம் (செப். 12) குறித்த பாடசாலைகளில் வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவனுக்கும் , நயினாதீவுஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இரு மாணவிகளுக்கும் ஊக்குவிப்புத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.20,000.00 வழங்கி வைக்கப்பட்டது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய மாணவிகள் .தரணிகா, வி.திவ்வியாமற்றும் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவன் சுதாகரன் பவித்திரன் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நயினை மண்ணின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்விமற்றும் பாடசாலைபௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதில் அக்கறையோடு செயற்பட்டு வரும்நயினாதீவு சுவிஸ் அபிவிருத்திக் கழகத்தினருக்கு நயினை மக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article