நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தங்களின் ஆசனங்களை இழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் தோல்வியடைந்தார்.
- புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் தோல்வியுற்றார்.
- கடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற அங்கஜன் ராமநாதனும் இம்முறை தோல்வியடைந்தார்.
தேசியப் பட்டியல் ஊடாக,
- கடந்த முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செல்வராசா கஜேந்திரன்இம்முறை தோல்வியுற்றார்.
ஈபிடிபி கட்சியில்,
- கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது முதல் தோல்வியை சந்தித்தார்.
- வன்னி மாவட்டத்தில் குலசிங்கம் திலீபனும் தோல்வியுற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்,
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தோல்வியடைந்தார்.
- தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன், இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
பதுளை மாவட்டத்தில்,
- ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் இம்முறை தோல்வியடைந்தனர்.
இந்த தேர்தலில் தமிழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.