தோட்டக்கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ஏழாலை, மயிலங்காட்டில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆறுமுகம் துரைராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 23) இரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. நேற்றுக்காலை வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் வலிகாமம் கிழக்கு இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இவர் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்ததாலேயே உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Share this Article