எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல்ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் குறித்தபடிவம் காட்டுகிறது.
இதில் முதலாவதாக அக்மீம தயாரதன தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க 37 இடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச என்ற இருவேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் இரு வேட்பாளர்களின் பெயர்களும் ஒரேஇடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர்பட்டியலில் 16வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் சஜித் பிரேமதாச இந்தப் பட்டியலில் 21வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின்பிரதானி கங்கானி கல்பானி லியனகே விளக்கமளித்துள்ளார்.
வாக்குச் சீட்டு அச்சிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பலமுறைபேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிதொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பிலான அச்சுப் பணிகளுக்குப் போதுமான பொருட்கள்தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன எனவும், இன்னும் ஓரிரு நாட்களில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.