தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்துக்கான இணையத்தள சேவை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலகப் புகழ் பெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையினை இன்று (நவம்பர் 7) தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் என்பது தனித்து ஒரு வழிபாட்டு ஆலயமாக இல்லாமல் பல்வேறு சமூக நலத்திட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு சிறந்த சமூக நலன்சார்ந்த நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.

இவ் தேவஸ்தானத்தின் பெருமைகள் மற்றும் தேவஸ்தானத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்ட செயற்பாடுகள் தொடர்பில் உலகில் உள்ள சகல இன, மத, மொழி மக்களும் மிக இலகுவில் அறிந்து கொள்ளும் நோக்கில், தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்திற்குரிய புதிய இணையத்தள சேயைினை செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Share this Article