தெல்லிப்பழையில் இலவச அரசிப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் மூலம்
தெல்லிப்பழை பிரதேசத்தில் வசிக்கும் 10,091 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் வீதம் அரசிப் பொதிகள் இன்று (ஏப்ரல் 28) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்
ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் திரு சங்கல ரட்நாயக்கா இலங்கை இரானுவத் தளபதி யாழ் மாவட்ட இரானுவத் தளபதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இலங்கை இரானுவத்தின் மேதிக பங்களிப்புடன் மிகவும் வறிய நிலையில் உள்ள 10091 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் வீதம் அரசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Share this Article