தனிநபர்களுக்கு தற்காப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் ஒப்படைக்க உருவாக்கப்பட்ட கால அவகாசம் எந்த நிலையில் இருந்தாலும் மேலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்க தவறி தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம் முன்னதாக டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், போர் காலத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி ஒப்படைக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.