கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ் அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (ஒக். 13) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும்நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ் வருடத்திற்கானகிராமிய வீதிகளின் அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ்மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாகமுன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு குறிப்பாக வீதிஅபிவிருத்திகள் உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்கஅரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் இடம்பெற்ற போக்குவரத்து தொடர்பான யாழ்ப்பாண மாவட்டஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம்மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தீவக பகுதிகளுக்கு 250 மில்லியன்ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க குறித்த பிரதேச செயலாளர்களிடமிருந்து திருத்தப்பட வேண்டியவீதிகளின் பட்டியல்கள் திரட்டப்பட்டு அரசாங்க அதிபரினால் அமைச்சிற்குஅனுப்பப்பட்டு அமைச்சினால் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.