தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்துறை, வேலணை நெடுந்தீவு, மற்றும் காரைநகர் பிரதேச செயலகங்களினை உள்ளடக்கியதாக காணப்படும் தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நேற்று (செப்ரம்பர் 27) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது

பொதுக்கூட்டத்தில் வருடாந்த செயலாளர் அறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டதுடன், கலந்துரையாடலும் இடம் பெற்றது.

தொடர்ந்து இவ்வாண்டுக்கான புதிய நிர்வாகத் தேர்வுகள் இடம் பெற்றன வருடாந்தம் ஜீன் மாதத்தில் இவ் நிகழ்வு நடைபெறுகின்ற போதும், கொறோனா வைரஸ் தொற்றின் காரணமாக பின் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகத் தெரிவுகள் மத்தியஸ்தர் சங்கத் தலைவர் திரு.ப.உதயன் அவர்களது தலமையில் இடம் பெற்றது பின்வருவோர் புதிய நிர்வாக அங்கத்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்:- திரு.செ.கேதிஸ்வரன்
செயலாளர் – திரு.அ.யஸ்ரீன்
பொருளாளர் – திரு.கு.சந்திரகுமார்
உபதலைவர்கள் – 1.திரு.கு.ஜனேந்திரன்
2. திரு.செ.லெனின் ரஞ்சித்குமார்
உப செயலாளர் – திரு.ச.சத்தியமூர்த்தி
நிர்வாக உறுப்பினர்கள்
இ.சிவந்தன்
சே.அயூரன்
எஸ்.தரங்கன்
ஒ.பில்கிலின்டன்
ஜெ.சுபிதன்
எஸ். ஜீபொன்
சபையின் ஆலோகராக திரு.ஜெறால்ட் அன்ரனி அவ்களும், கணக்காய்வாளராக திரு.தி.பத்மதாஷ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

Share this Article