தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (செப்ரம்பர் 27) தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ஜெறால்ட் அன்ரனி அவர்களது தலமையில் சிறப்பாக இடம் பெற்றது

நடைபெற்ற நிகழ்வில் டான் குழுமத்தின் தலைவர் திரு.குகநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கௌர யாழ் மாநகர சபையின் முதல்வரும் யாழ்ப்பாண உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான திரு.இம்மானுவேல்ட் ஆனல்ட் அவாகள் கௌர விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக வேலனை பிரதேச செயலகத்தின் திட்டப்பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

குறிப்பிட்ட இந்நிகழ்வில் கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற போட்டி நிலமைகளைக் கருத்திற் கொண்டு சிறந்த விளையாட்;டு வீரர் சிறந்த கோல் காப்பாளர், சிறந்த நன்நடத்தை விளையாட்டுக் கழகம், போன்ற பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் தீவக நெடுந்தீவு அணிகளுக்கான காலணிகளும் வழங்கப்பட்டன.

Share this Article