தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழகமை செப்ரம் 27ம் திகதி வேலணை பிரதேச செயலகத்தில் காலை 09.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.இ.ஜெயால்ட் அன்ரனி அவர்களது தலமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் பிரத விருந்தினராக டான் ரீவி குழுமத்தின் தலைவர் திரு.குகநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.எ.சோதிநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் மாநகர சபையின் முதல்வரும் யாழ்ப்பாண உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான திரு.இம்மானுவேல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

ஊர்காவற்துறை, வேலணை, நெடுந்தீவு காரைநகர் ஆகிய நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய தீவக உதைபந்தாட்ட சங்கமானது அண்மைக்காலமாக மிக சிறப்பாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

வருடாந்த பரிசளிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share this Article