நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தீவகப்பகுதி மக்களின் முழுமையான வாக்குப் பலத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது அரசியல் பலத்தை அதிகரிப்பதுடன் அதனூடாக தீவகப் பகுதியினது அபிவிருத்திகள் முழுமையடையச் செய்யப்படுவதுடன் மக்களது அனைத்து தேவைப்பாடுகளும் நிறைவு செய்யப்படும் என ஈ.பி.டி.பி கட்சியின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
தீவகப் பகுதி மக்கள் எமது கட்சியின் மீதும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீதும் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த காலங்களில் நாம் இப்பகுதிக்கு செய்துள்ள சேவைகள் ஏராளம்.
ஆனாலும் அவற்றை நாம் முழுமையாக பெற்றுக்கொடுக்க இன்னமும் எம்மிட் முழுமையான அரசியல் பலத்தை தமிழ் மக்கள் வழங்கவில்லை.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தீவக மக்கள் எமது கட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குவார்களேயானால் நிச்சயமாக எம்மால் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கும் அதிகளவான அபிலாசைகளை நிறைவுசெய்துகொடுக்க எம்மால் முடியும். அதற்கான திட்டங்களும் சிறந்த பொறிமுறைகளும் அதை முன்னெடுத்தச் செல்லும் ஆற்றல் மிக்க தலைமையும் எமது கட்சியிடம் உள்ளது.
அந்தவகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தீவகப்பகுதி மக்களின் அதிகளவான வாக்குப் பலத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது அரசியல் பலத்தை அதிகரித்து அதனூடாக தீவகப் பகுதியினது அபிவிருத்திகளை முழுமையடையச் செய்யப்ப எம்முடன் அணிதிரள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.