ஈழத்தின் புகழ்பெற்ற, வானொலி, மேடை, திரைப்படப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் நேற்று (ஒக்ரோபர் 15) காலை கிளிநொச்சியில் காலமானார்.
1970, 1980 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக்கலைத்துறையின் மிக உன்னதமான காலகட்டங்களில் ஆயிரக்கணக்கான மேடைகளில் நின்று பாடல்கள் பாடி பல்லாயிரக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களைக் கவர்ந்த காலத்தால் மறக்க இயலாத இனிமைக்குரலோன் ஸ்ரனி சிவானந்தன், கண்ணன் கோஷ்ரியின் ஓர் அடையாளம்.
அன்னாரின் புகழுடல் ஒக்ரோபர் 15 ஆம் திகதி மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.