திருத்தப்படுமா பிரதான வீதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவின் பிரதான வீதி பல ஆண்டுகளாக திருத்தம் செய்யப்படாமையால் பிரதான வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்பான நிலையிலேய காணப்படுகின்றது இதனால் மக்கள் அன்றாட போக்குவரத்துக்களை மேற்கொள்வது கடினமாகவே காணப்படுகின்றது

குறிப்பாக நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் போக்குவரத்து சபை பஸ் இதனால் அடிக்கடி காற்றுப் போகின்ற சந்தர்ப்பம் மற்றும் பழுதடைகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன் ஏனைய போக்குவரத்து சாதனங்களும் அடிக்கடி பழுதடைகின்ற சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன. இதனால் வாகனங்களுக்கான சேதரங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் எமது தீவிற்கு வந்து செல்லும் அரசியல் வாதிகள் தீவக ஆட்சி செய்கின்ற அரசியல் வாதிகள் தேர்தலின் பின்னாவது எமது பிரதான வீதியின் திருத்தம் தொடர்பாக கரிசனை காட்டுவார்களா எனும் ஏக்கம் எமது மக்கள் மனங்களில் காணப்படுகின்றது


நேற்யை நாளில் பெய்த சிறு மழைக்கே எமது வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகின்ற போது மாரிகாலம் ஆரம்பிக்கப்பட்டால் மக்களது நிலமை எவ்வாறாகும் என மக்களது கேள்விகள் தற்போது காணப்படுகின்றது.

Share this Article