புரெவி சூறாவளியானது திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது.
இதன் காரணமாக 80 – 90 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புரெவி சூறாவளியின் காரணமாக வடக்கு, வட மத்திய, கிழக்கு, வட மேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 80 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அத்தோடு, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.