திடீர் காய்சலால்  சிறுவன் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீடீர் காய்ச்சல் காரணமாக இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

சிறுவனுக்கு கடந்த மூன்று நாள்களாக காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அவர் இன்று இரவு 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சல் காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது

Share this Article