திடீர்ப் போராட்டத்தால் பயணிகள் திண்டாட்டம்!-ரயில் நிலையங்களில் இராணுவம் குவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ரயில் உப ஒழுங்குபடுத்தல் சேவையாளர்கள் திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பால் நேற்று(ஒக்ரோபர் 4)புதன்கிழமை மாலை பல ரயில் சேவைகள் தாமதமடைந்தன.

இந்தப் பணிப்புறக்கணிப்பால் அலுவலக ரயில் சேவைகள் உட்பட தபால் ரயில் சேவை உள்ளடங்கலாக 78 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன என்று ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை மாளிகாவத்தையில் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில் பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட ரயில் பாதுகாப்பு ஊழியரின் சேவையை இடைநிறுத்த வேண்டும் என்று கோரி கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்தப் பணிப்புறக்கணிப்பால் தொழில் உட்பட பல்வேறு தேவைகளுக்காக ரயிலில் பயணிப்பதற்காகக் காத்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர். அதையடுத்து, நேற்று மாலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Share this Article