தற்காலிகமாக மூடப்படவுள்ள தொழிற்சாலை!- அச்சத்தில் 1000 ஊழியர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் வேலை இழக்கும் அபாயம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிர்வாக உத்தியோகத்தர், முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளனர்.

இதற்கிடையில், ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்றும் Brandix குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் உமர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிவித்ததாக தொழில்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வழமை போன்று ஆடை உற்பத்திக்கான கோரிக்கை இல்லாமை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் நிதி நெருக்கடியினால் டொலரின் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் நாட்டின் ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படுவது இயல்பானதாகி விட்டது.

ஆசியாவில், Brandix நிறுவனத்திற்கு சொந்தமான பல தொழிற்சாலைகள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் அமைந்துள்ளன, அவை மிகவும் வெற்றிகரமாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.

Share this Article