தம்பாட்டி கிராமத்தில் 15 பேருக்கு கொரோனா மொத்த தொற்றாளர் 25 ஆக அதிகரிப்பு-
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பாட்டிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 869 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 04 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனையில் ஒருவரும், அன்டிஜன் பரிசோதனையில் 09 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
தம்பாட்டி நண்டுத் தொழிற்சாலை மொத்த தொற்றாளர் 25 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.