தமிழ்த் தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு பொலிஸார் அழைப்பாணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸாரால் அச்சுறுத்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சிலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி வடமராத சம்பவம் தொடர்பில் ட்சி கிழக்கு, மருதங்கேணியில் சந்திப்பு ஒன்றுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும், பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திய இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதன்பின்னர் அருகில் இருந்த பாடசாலையில் பரீட்சைக் கடமையில் இருந்த இரு பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஏனைய இரு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மூவரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

Share this Article