தமிழர்கள் அதிகம் பலியாகும் சாலை விபத்துகள் – பயிற்சி நிலையங்களின் தரத்தை கண்காணிக்க உத்தரவு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்டத்தில் செயற்படும் சாரதி பயிற்சி நிலையங்களின் செயல்திறன் மற்றும் தகுதி தொடர்பில் பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விபத்துகளில் பெரும்பாலான பலியாகும்வர்கள் தமிழ் மக்களே என்பதும் புள்ளிவிபரங்களால் தெளிவாக தெரியவருகின்றது. இதனால் சாரதி பயிற்சி நிலையங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாவது –
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகனங்களாலேயே நிகழ்கின்றன. குறிப்பாக FZ வகை மோட்டார் சைக்கிள்களின் அதிவேக ஓட்டமே பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் உள்ளன. மேலும் பிரதான வீதிகளில் அதிவேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளைவீதிகளில் திரும்பும் போதும், கிளைவீதிகளில் இருந்து பிரதான வீதிகளுக்கு நுழையும் போதும் அதிக அளவில் விபத்துகள் மற்றும் மரணங்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தெரிவித்ததாவது –
யாழ் மாவட்டத்தில் 13 சாரதி பயிற்சி நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் இரண்டு பயிற்சி நிலையங்கள் அனுமதிப் புதுப்பித்தலை மேற்கொள்ளாத நிலையில் உள்ளதால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்நிலையங்கள் முறையாக பயிற்சி வழங்குகிறதா அல்லது முறைகேடுகள் இடம்பெறுகிறதா என்பதையும் பொலிசார் கவனமாக கண்காணிக்க வேண்டும். மேலும் வாகனங்களின் தரம், பாதுகாப்பு வசதிகள், தூரப் பயண வாகனங்களுக்கு 48 மணி நேர செல்லுபடியாகும் சோதனைச் சான்றிதழ்கள், இருக்கைப் பட்டா பயன்பாடு ஆகியவற்றின் அவசியம் குறித்து சேதனைகள் முன்னெடுக்கப்பட்டு, விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share this Article