இலங்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கும் அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக பிரதி மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை கருதப்படுகிறது.