ஓட்டோவுடன் லொறி மோதியதில் இளம் தம்பதி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்று (ஜூலை 21) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்குத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஓட்டோ மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த 27 வயதுடைய கணவனும், 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

34 வயதுடைய ஓட்டோ சாரதி படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article