தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து வைக்க இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார் கௌரவ அமைச்சர் நாமல்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read
30.05.2021 கொவிட் தடுப்பூசி திட்டத்தை கௌரவ  ஆரம்பித்து வைக்க இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார் கௌரவ அமைச்சர் நாமல் !!!
இன்றைய அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசினால் நாடுபூராகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை கௌர அமைச்சர் நாமல் ராஜபக்ச (30) இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருகின்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெறும் விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளும் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ச பின்னர் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்தினை பார்வையிட உள்ளத்தோடு தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக ஐம்பது ஆயிரம் சீனத் தயாரிப்பான “”சைனோபார்ம்”” தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை – 30.05.2021) முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.
மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட. தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும்
மக்கள் பதிவு செய்துள்ள கிராம அலுவலகர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியைப் பெறமுடியாது .
குறித்த தினத்தில் தடுப்பூசியினை பெறத்தவறின் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக் கொள்ளலாம்.
ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது
Share this Article