டென்மார்க் தீ விபத்தில் சிக்கி யாழ் இளைஞன் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டென்மார்க்கில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று தெற்கைச் சேர்ந்த ஆறுமுகசாமி காண்டீபன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த குடும்பஸ்தர் டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை(நவம்பர் 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.

Share this Article