டெங்குத் தொற்றினால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் இராணுவ சிப்பாய் டெங்குத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த கே.எம் .கே .செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்தவராவார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article