டெங்கால் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 நேற்று (06/07) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாகவே பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் தொடர்ந்தும் நடைபெறும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Share this Article
Leave a comment