கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது, ஹங்வெல்ல விடுதியின் குளியலறையில் பெண்ணின் தலையை, புத்தல பொலிஸ் உத்தியோகத்தர் பிரேமசிறி வெட்டி அப்புறப்படுத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மேலும், யுவதியின் கழுத்திலுள்ள காயங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த யுவதி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்