டம்மி இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பொலிஸ் இடைநீக்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்சி 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட், சந்தேக நபருடன் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து கை சைகைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போல தோற்றமளித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி என்ற பெண்  நேபாளத்திற்கு அழைத்துr; செல்லப்பட்டு, அவரது கடவுச்சீட்டினை பயன்படுத்தி  இஷாரா செவ்வந்திக்கு மற்றொரு போலி கடவுச்சீட்டினை உருவாக்கி, துருக்கிக்குச் சென்று பின்னர் மலேசியாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment