ஜயவிமன வீட்டுத்திட்டத்தின் இரு வீடுகள் நெடுந்தீவில் திறந்துவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இன்று (ஒக்ரோபர் 19) ஜயவிமன வீட்டுத்திட்டத்தின் இரு வீடுகள் திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு ஜே/03, ஜே/06 கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் F. C. சத்தியசோதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவருடன் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ. ராஜ்பவன், வலய முகாமையாளர் அ. மெர்சிபபிலா பிரிவுகளின் உத்தியோகத்தர் த.கனகரஞ்சினி மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article